கிளிநொச்சியில் புதிதாய் முளைத்த கருணா அம்மான் படையணி. - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 24 September 2022

கிளிநொச்சியில் புதிதாய் முளைத்த கருணா அம்மான் படையணி.

தவறான ஜனாதிபதியை தெரிவு செய்தமையால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து நாடு சீருக்கு திரும்ப ஐந்து ஆண்டுகளாவது செல்லும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா  என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் (24-09-2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலத்தை இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும்.

இன்று எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கி சென்று நாடாளுமன்றத்தில் அமர்த்த வே்ணடும். நடக்க முடியாத நிலையில் நாடாளுமன்றம் சென்று எவ்வாறு எமக்கு சேவை செய்யப்போகின்றார்கள்.

இந்த நிலையில் இளைஞர்கள் கையில் அடுத்த காலம் செல்ல வேண்டும். அதற்காகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து பயணிக்கின்றோம்.

யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனது அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன். அவ்வாறு நீ்ங்களும் உறவுகளையும், அங்கங்களையும் இழந்து இன்றும் மாறாத வடுக்களுடன் வாழ்கின்றீர்கள்.

தொடர்ந்தும் கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவ்வாறு பேசுவதென்றால் நிறைய பேசக்கூடியதாக இருக்கும். அவற்றை விட்டுவிட்டு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அகில இலங்கை ரீதியில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதனை நாங்கள் பாராட்டியாக வேண்டும். அவ்வாறு கல்வியில் நாம் இன்று பின்னோக்கி செல்லவில்லை. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு முன்னுக்கு வரலாம் என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது இன்னும் 5 ஆண்டுகளிற்கு குறையப்போவதில்லை.

தவறான ஜனாதிபதி ஒருவரை நாங்கள் தெரிவு செய்தமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது.

மாற்றங்களை உருவாக்கலாம் என்ற நோக்கில் நானும் பின்னால் நின்றேன். எவரது ஆலோசனைகளையும் கேட்காது பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததன் விளைவினை இன்று நாங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது.

பசளைக்கு தடை விதித்தமையால் ஏற்பட்ட விவசாய உற்பத்தியின் பாதிப்பே பொருளாதாரத்தை சரிவடைய செய்தது. அதனால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தார்.

தொடர்ந்து பல பொருட்களிற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது. மஞ்சளிற்கு விதிக்கப்பட்ட தடையால் 6,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு, பல்வேறு வகையில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை இன்று நாங்கள் அனுபவித்து வருகின்றோம்.

அதனால் மக்கள் கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டு நாட்டை விட்டு கலைக்கப்பட்டு, எந்தவொரு நாடும் தஞ்சம் கொடுக்காத நிலையில் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

எனவே நாங்கள், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் வடக்கு கிழக்கு மக்கள் சிந்திக்க வேண்டும். அதற்க்கான முன்னேற்றத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here