யாழில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் நேற்று (24-09-2022) அதிகாலை உயிரிழந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனையிலும் அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணத்திற்க்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் கடந்த 6 மாதங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் ஹெரோயினுக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment