அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம். - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 24 September 2022

அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தம்.

 வடக்கு தொடருந்து பாதையில் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளன.

இந்தியாவின் நிதியுதவியுடன் வடக்கு தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது.

எனினும் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் இருந்து ஓமந்தை வரை செல்லும் பயணிகளுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓமந்தை தொடருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை தொடருந்து சேவைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here