பிறந்த குழந்தையை வடிகாணில் வீசிய தாய், தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேசன் வட்டகொடை, லோவர் டிவிசனை சேர்ந்த 21 வயதான, திருமணமாகாத பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடிகாணில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment