மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம். - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 24 September 2022

மீண்டும் தலைதூக்கியுள்ள துப்பாக்கி கலாச்சாரம்.

 அஹுங்கல்ல- போகஹபிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றைய நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 5 வெற்றுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here