சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலையைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், என்று குப்தா கூறியுள்ளார்.
விலை திருத்தம் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 1ம் திகதி அறிவிக்கப்படும்.கடந்த 30 நாட்களாக கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகின்றது.
கடந்த 30 நாட்களின் எரிபொருள் விலையின் அடிப்படையில் விலை திருத்தம் மதிப்பீடு செய்யப்படும், எனவே இந்த விலை குறைப்பினை அமைச்சர் முடிவு செய்வார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment